உச்சிப்புளி அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் மானிய விலையில் தென்னங்கன்றுகள் விநியோகிக்கப் படுகின்றன.
உச்சிப்புளி அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) எஸ்.எஸ். சேக் அப்துல்லா ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் கூறியதாவது: நெட்டைத் தென்னை 70 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை இருக் கக்கூடியது. 7 முதல் 10 ஆண்டுக்குள் காய்க்கத் தொடங்கும். குட்டை வகைகள் நட்டு 3 முதல் 4 ஆண்டுகளுக்குள் காய்க்கத் தொடங்கும். இவற்றின் ஆயுள் 30 முதல் 35 ஆண்டுகள். கடந்த ஜனவரியில் பருவம் தவறி பெய்த மழையால் உச்சிப்புளி வட்டாரத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் உள்ளது. இந்த நீரை பயன்படுத்தி தென்னை கன்றுகள் நட்டு பயன் பெறலாம். உச்சிப்புளி அரசு தென்னை நாற்றுப்பண்ணையில் நெட்டை குட்டை ரக கன்றுகள் மொத்தம் 2200 இருப்பு உள்ளது. இதன் விலை ஒரு கன்று ரூ 80-ம், நெட்டை ரக கன்றுகள் 1500 இருப்பு உள்ளது. இதன் விலை கன்று ஒன்றுக்கு ரூ.50-ம் மானியத்துடன் விநியோகிக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுபாடு) பி.ஜி.நாகராஜன், வட்டார வேளாண்மை அலுவலர் கலைவாணி உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago