கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பேத்துப்பாறை கிராமம் அருகே வனப்பகுதியில் பழங்குடியினர் வழிபடும் 6 அடி உயர பீமன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி கடந்து செல்ல வேண்டும்.
விவசாயம் செழிப்பதற்கும், நலமுடன் மக்கள் வாழவும் ஆண்டுதோறும் இங்கு விழா எடுக்கப்படுகிறது.
பழங்குடி இன மக்களுடன் இணைந்து பேத்துப்பாறை கிராம மக்களும் இந்த வழிபாட்டில் கலந்துகொள்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான விழாவை யொட்டி, ஆற்றைக் கடந்து வனப் பகுதியில் உள்ள பீமன் கோயிலை அடைந்தனர். பழங்கால வாத்தியங்களுடன் விழாவில் ஆடு, சேவல்களை படையலிட்டு வழிபட்டனர்.
பழங்காலத்தில் வனப்பகுதிக்குள் தேன் எடுக்கச் சென்றபோது அங்கு வந்த பீமன் பசியுடன் இருந்ததாகவும், அவருக்கு பழங்குடியின மக்கள் தேன் வழங்கியதால் பசியாறி, உணவளித்த உங்களுக்கு காவலாக இருப்பேன் எனக் கூறியதாக ஐதீகம். தங்களை காக்கும் பீமனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த விழா நடத்தப்படுவதாக பழங்குடி மக்கள் கூறுகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago