நமது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் பெண்களுக்கான ஓராண்டு முதுநிலை ‘பெண்ணியல்’ பட்டயப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருந்தால் இதில் சேரலாம்.
“பெண்கள் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இந்த பட்டயப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் ஆளுமைப் பண்புகளை மேம்படுத்திக்கொள்ள இப்பட்டயப் படிப்பு உதவும், பெண்கள் சுய வேலைவாய்ப்பு பெற இப்படிப்பு வழி காட்டுகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்கள், பெண்கள் சேவை சங்கங்கள் ஏற்படுத்தி நடத்துவதற்கு வழிகாட்டுதல், ஊடகம், பத்திரிக்கை,சமூக சேவை மற்றும் பெண்கள் ஆலோசனை மையப் பணி போன்றவைகளில் ஈடுபடுவது தொடர்பான ஒரு வழிகாட்டுதலை இப்பட்டயப் படிப்பின் மூலம் பெறலாம்” என்கிறார் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூர கல்வி மைய இயக்குநர் ஏ.ராஜசேகரன்.
“அஞ்சல் அல்லது இணைய வழியில் பயிற்றுவிக்கப்படும் இப்படிப்பில் சேர வயது வரம்பு எதுவும் இல்லை. பெண்களின் முன்னேற்றத்தில் விருப்பமுள்ள ஆண்களும் இப்பட்டயப் படிப்பில் சேரலாம்” என்கிறார் தொலைதூர கல்வி இயக்கக ஒருங்கிணைப்பாளர் கே.சங்கரி.
இதுதவிர அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தின் மூலம் 292 படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களை இப்பல்கலைக்கழகத்தின் ‘https://www.annamalaiuniversity.ac.in/dde’ இணையதளத்தில் காணலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago