தேனியில் மூன்று இடங்களில் சாலை மறியல்: 144 பேர் கைது

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டத்தில் நேற்று நகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை மறியலில் 144 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முன்பாக தொடர்ந்து 5-வது நாளாக தமிழ்நாடு அரசு அனைத்து ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணைத் தலைவர் முத்தையா தலைமை வகித்தார். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 82 பெண்கள் உட்பட 92 பேர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் போராடி வருகின்ற விவசாயிகளுக்கு ஆதரவாக தேனி நேரு சிலை அருகே தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

வேளாண் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். மறியலில் ஈடுபட்ட 31 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் காங்கிரஸ் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மூன்று வேளாண்மை சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தப்பட்டது. இதில் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனியில் மூன்று இடங்களில் நடைபெற்ற சாலை மறியலில் மொத்தம் 144 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்