பெரியகுளம் அருகே கீழவடகரை பெருமாள்புரத்தில் காளியம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் பூஜை முடிந்தபின் கோயில் மூடப்பட்டது. நேற்று காலையில் கோயில் கதவின் பூட்டு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது உண்டியலில் இருந்த சுமார் ரூ.30 ஆயிரம் மற்றும் அம்மனுக்கு அணிவித்திருந்த வைர மூக்குத்தி, தாலிப்பொட்டு, தங்கக் காசு, தங்க குண்டு, வெள்ளிக் கொலுசு, ஐம்பொன் முகக்கவசம் உள்ளிட்ட நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதன் மொத்த மதிப்பு ரூ.1.07 லட்சம் ஆகும். அர்ச்சகர் முருகன் புகாரின் பேரில் பெரியகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago