போடியில் நகர, ஒன்றிய திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ச.லட்சுமணன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினார். பிப்.9, 10 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தரும் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. வரும் தேர்தலில் தேனி மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியகுளம் எம்எல்ஏ சரவணன், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் சங்கர், நகரச்செயலாளர் செல்வராஜ், முன்னாள் நகரச் செயலாளர் ரமேஷ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஐயப்பன், நகர அவைத் தலைவர் சின்னதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago