டாமின் நிறுவன ஊழியர்கள் ஓய்வூதியத்தில் குளறுபடி 10 ஆண்டுகளில் 500 பேர் பாதிப்பு

வகங்கை அருகே கோமாளிபட்டி கிராஃபைட் தொழிற்சாலை உட்பட மாநிலம் முழுவதும் இயங்கும் டாமின் நிறுவனங்களில் ஓய்வுபெற்ற ஊழி யர்களுக்கு ஓய்வூதியத்தில் ஏற்பட்ட குளறுபடியால் 10 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட் டுள்ளனர்.

தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) மூலம் கிரானைட், கிராபைட், சுண்ணாம்புக்கல், வெர்மிகுலைட் போன்ற கனிமங்கள் வெட்டி எடுக்கப் படுகின்றன. சிவகங்கை அருகே கோமாளிபட்டி உட்பட 96 இடங்களில் கனிமங்கள் எடுக் கப்படுகின்றன. இங்கு அதிகாரிகள் உட்பட 800-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்நிலையில் உரிமம் புதுப்பிக்காதது, கனிமங்களை விற்பனை செய்வதில் குளறுபடி போன்ற காரணங்களால் பல இடங்களில் குவாரிகள் முடங்கி உள்ளன. மேலும் கடந்த 10 ஆண்டு களாக இந்நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு முறையான ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படவில்லை.

இதனால் ரூ.80 ஆயிரத்துக்கு மேல் ஊதியம் பெற்ற பணியாளருக்கு மாத ஓய்வூதியமாக வெறும் ரூ.2,500 மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த குளறுபடியால் 10 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட் டோர் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லாததால் விரக்தியில் உள்ளனர்.

இதுகுறித்து டாமின் நிறுவன ஊழி யர்கள் சிலர் கூறியதாவது: நிர்வாகத் திறமையின்மையால் லாபத்தில் இயங்கிய பல குவாரிகள் முடங்கி விட்டன. இதனால் ஓராண்டுக்கும் மேலாக பாதி ஊதியமே கிடைக்கிறது. அதேபோல விதிமுறையைப் பின்பற்றி ஓய்வூதியம் நிர்ணயிக்காமல் அதி காரிகள் இஷ்டத்துக்கு நிர்ணயிக் கின்றனர். இதனால் அதிக ஊதியம் வாங்கியவருக்கு குறைவான ஓய்வூதி யமும், குறைவான ஊதியம் பெற் றவருக்கு அதிக ஓய்வூதியமும் வழங் கப்படுகிறது. இந்தக் குளறுபடியால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்சினையைத் தீர்க்க அரசு முன்வர வேண்டும்,’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE