வகங்கை அருகே கண்மாயை அடைத் ததால் ஒரு மாதமாக 25 குடும்பங்கள் மழைநீரில் தத்தளித்து வருகின்றன.
சிவகங்கை அருகே மேல வாணி யங்குடி புறவழிச் சாலை பகுதியில் மாருதி நகரில் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றன. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் மேலவாணியங்குடி கண்மாய் நிரம்பியது. மீன் வளர்க்க ஒப்பந்தம் எடுத்தோர் கண்மாயில் உபரி நீரை வெளியேறவிடாமல் அடைத்து வைத் துள்ளனர்.
இதனால் தண்ணீர் வெளியேற வழியின்றி குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது. ஒரு மாதமாக தண்ணீர் தேங்கியுள்ளதால் வீடுகளுக்குள் பாம்பு, தவளை, எலி போன்றவை வருகின்றன. இதைத்தொடர்ந்து தண்ணீர் தேங்கிக் கிடப்பதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதால் குழந்தைகள், முதியோர் வெளியேற முடியாமல் சிரமப் படுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த குமரன், பழனி முருகன் கூறியதாவது: அனுமதி பெற்ற மனையிடம் என்பதால் விலைக்கு வாங்கி, 4 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டி குடியேறினோம். எங்கள் பகுதி நீர்பிடிப்பு பகுதி இல்லை.
கண்மாயில் உள்ள உபரி நீரை வெளியேற்றாததால்தான் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மீன் வளர்ப்புக்காக கண்மாயை குத்தகை எடுத்தோர் தண்ணீரை வெளியேற்ற மறுக்கின்றனர். மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஊராட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்தோம். அவர் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், சாலை வசதி ஏற்படுத்தி தருவதாகவும் கூறியுள்ளார், என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago