சிவகங்கையில் அதிமுக முக்கிய பிரமுகர்களை இழுக்கும் முயற்சியில் அமமுகவினர் தக்க வைக்க போராடும் அமைச்சர் தரப்பு

By செய்திப்பிரிவு

வகங்கை மாவட்டத்தில் அதிமுக முக்கியப் பிரமுகர்களை இழுக்கும் முயற்சியில் அமமுகவினர் ஈடுபட் டுள்ளதால் அவர்களைத் தக்க வைக்கும் முயற்சியில் அதிமுக மாவட்டச் செய லாளர், அமைச்சர் பாஸ்கரன் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து கடந்த ஜன.27-ம் தேதி சசிகலா விடுதலையானார். மேலும் கரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சில நாட்களுக்கு முன்பு குணமடைந்து பெங்களூருவில் உள்ள விடுதியில் தங்கி உள்ளார். அவர் நாளை (பிப். 8) சென்னை திரும்ப உள்ளார்.

இதற்கிடையில் அதிமுக, அமமுக இணையும் என்றும், அதிமுகவை சசிகலா மீட்டெடுப்பார் என்றும் சசிகலாவின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை மாவட் டத்தில் சிவகங்கை, திருப்பத்தூர், தேவ கேட்டை, காரைக்குடி, கண்ணங்குடி, சாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சசிகலாவை ஆதரித்து அதிமுக பிரமுகர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். மேலும் சென்னை வரும் சசிகலாவை வரவேற்க அமமுக தரப்பினர் தயாராகி வருகின்றனர். அத்துடன் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவில் பதவி, கிடைக்காதவர்கள், மாவட்ட நிர்வாகிகள் மீது அதிருப்தியில் இருப்பவர்கள், கடந்த மக்களவைத் தேர்தலின்போது அமமுகவில் இருந்து அதிமுகவுக்குச் சென்று முக்கியத்துவம் பெற முடியாதவர்கள் என அனைத்து தரப்பினரையும் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், அமைச்சர் ஜி.பாஸ்கரன் தரப்பினர், சசிகலாவுக்கு ஆதரவாகச் செல்லும் கட்சியினரைத் தடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக, அமமுக இணையும் என்றும், அதிமுகவை சசிகலா மீட்டெடுப்பார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்