இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய இயக்குநராக (சந்தைப்படுத்தல்) வி.சதீஷ்குமார் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் இதற்கு முன்பு மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் வர்த்தக பிரிவின் தலைவராக பதவி வகித்தார். பிரதம மந்திரிஉஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு மானியத்தை அவர்களது வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதற்கான பிஎஸ்-6 எரிபொருள் திட்டத்தை செயல்படுத்தியதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.
மேலும், மலேசியாவில் உள்ளஇந்தியன் ஆயில் பெட்ரோனாஸ்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்தபோது, எல்பிஜி எரிவாயுவை அதிக அளவு இந்தியாவுக்கு இறக்குமதி செய்து, உள்நாட்டின் எரிவாயு தேவையை பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்காற்றினார். பொறியியல் பட்டதாரியான சதீஷ்குமார்,சந்தைப்படுத்தல் துறையில் ஆழ்ந்த அனுபவ அறிவு பெற்றுள்ளார் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago