சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் சுவர் பூச்சு வேலை தரமற்றதாக இருப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, ஐஐடி வல்லுநர்கள் குழு அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆய்வு மேற் கொண்டு, அண்மையில் ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில், அங்கு மோசமான பூச்சு வேலைநடத்திருப்பதாகவும், நிர்ணயிக்கப்பட்ட அளவில் மணல் -சிமென்ட் கலவை விகிதம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை, மாநகராட்சி சார்பில் கூவம் ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டுள்ள தடுப்புவேலிகளுக்கான சுவர்களின் உறுதித்தன்மையை ஆய்வுசெய்தார்.
மேலும், சிமென்ட் மற்றும் மணல் ஆகியவை சரியான விகிதத்தில் கலந்து கட்டப்பட்டுள்ளதா என்றும் பரிசோதித்தார்.
தொடர்ந்து, மாநகராட்சி சார்பில்நடைபெற்று வரும் அனைத்து கட்டுமானப் பணிகளிலும் மணல் -சிமென்ட் கலவை விகிதம்மு றையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யுமாறு மாநகராட்சியின் அனைத்து மண்டல அதிகாரிகள், மண்டலப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago