சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே கீழடிக்கு வந்த முதல்வரை அதிகாரிகள் சந்திக்க விடாததால் அகழாய்வுக்கு நிலம் கொடுத்தோர் வேதனை அடைந் தனர்.
கீழடியில் இதுவரை 7 கட்ட அக ழாய்வு நடந்துள்ளது. அகழாய்வு நடந்த இடங்கள் பெரும்பாலும் தனியார் விளை நிலங்கள். இதனால் அகழாய்வுக்காக குழிகள் தோண்டினால் விவசாயம் பாதிக்கும் எனக் கூறி விவசாயிகள் தங்களது நிலத்தை தர மறுத்தனர்.
வருவாய்த் துறை, தொல்லியல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயத்துக்குத் தேவை யான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து விவசாயிகள் தங்களது நிலத்தை அகழாய்வு செய்வதற்கு இலவசமாக வழங் கினர். ஏற்கெனவே நடந்த 6-கட்ட அகழாய்வின்போது தோண்டப் பட்ட குழிகள் மூடப்பட்டுள்ள போதும், அங்கு முன்பை போல் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே, சொட்டுநீர் பாசன வசதி செய்து தர வேண்டும். சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைத்து தர வேண்டும் என தொடர்ந்து நில உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும் நிலம் கொடுத்தோர் பெயர்களை தற்போது கட்டப்பட்டு வரும் கீழடி அகழ் வைப்பகத்தில் கல்வெட்டில் பதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் அகழாய்வுக்கு நிலம் கொடுத்தோர், நேற்று கீழடிக்கு வந்த முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை தெரி விக்க காத்திருந்தனர். ஆனால் அவர்களை அதிகாரிகள் அனு மதிக்கவில்லை. இதனால் அவர்கள் வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து கொந்தகையைச் சேர்ந்த சுரேஷ் கூறியதாவது: அகழாய்வுக்கு நானும் எனது சகோதரியும் தலா ஒரு ஏக்கர் நிலத்தைக் கொடுத்தோம். எங் கள் இடங்களில் அகழாய்வு முடிந்ததும், உறுதியளித்த கோரிக்கைகளை அதிகாரிகள் செய்து கொடுக்கவில்லை.
இந்நிலையில் முதல்வரை சந்திக்க அதிகாரிகளிடம் நாங்கள் அனுமதி கேட்டோம். முந்தைய நாள் அனுமதிப்பதாக கூறினர். பின்னர் திடீரென அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago