பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு, கல்லாபுரம், மீனாட்சிபுரம் மற்றும் கண்ணம நாயக்கனூர் வழியாக, சட்டக்கல்புதூருக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டுவந்தது. இதனால், பள்ளி மாணவர்கள், விவசாயிகள், வேலைக்கு செல்வோர் பயனடைந்தனர்.
இந்நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், கரோனா தொற்று பரவல் அதிகரித்தபோது, இவ்வழித்தடத்தில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
தற்போது அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும் நிலையில், சட்டக்கல்புதூர் பேருந்து மட்டும் இயக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago