கோவையில் நாளை 7-வது முறையாக மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் இதுவரை நடந்த 6 தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 6 லட்சத்து 68 ஆயிரத்து 861 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை (அக்.30) ஏழாவது மெகா தடுப்பூசி முகாம் கோவையில் நடத்தப்பட உள்ளது. ஊரகப் பகுதிகளில் 271 முகாம்களும், மாநகராட்சிப் பகுதிகளில் 841 முகாம்களும் நடத்தப்பட உள்ளன. காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை, தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இம்முகாமில் ஏறத்தாழ 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாவது தவணை தடுப்பூசிக்கு காத்திருப்போர், தங்களது வீட்டுக்கு அருகில் நடக்கும் இந்த முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago