சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அதற்குமாற்றாக 12 பொருட்களை பயன்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தடையை மீறி உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அபராதமும் விதிக்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் அக்டோபர் 27-ம் தேதி வரை 3 ஆயிரத்து 339 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.8 லட்சத்து 14 ஆயிரத்து 700அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago