தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவராக நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் ந.கவுதமனைமுதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழத்தின் தலைவராக, நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த ந.கவுதமனை முதல் வர் மு.க.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். இவர் தமிழக மீனவர் பிரச்சினைகளை களையும் பொருட்டு, அரசு தரப்பில் அமைத்த குழுவில் இடம் பெற்று, இலங்கை சென்று, அங்கு நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு மீனவர் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு கண்டவர். கடந்த 2006-ம் ஆண்டு நாகப்பட்டினம் நகரமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago