புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அக். 23 முதல் 25 வரை கீழ்காணும் முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதன் விவரம்:
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் வரும் நவம்பர் 8-ம் தேதி முதல், 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான கல்வித் துறையின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
2021-ம் ஆண்டின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் நியாவிலைக் கடைகள் மூலமாக 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்கும் முதல்வரின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் காரைக்கால் பகுதியில் அட்டவணை மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நான்காம் கட்டமாக 83 வீடுகள் கட்டும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் திட்டத்துக்காக மத்திய அரசின் பங்கு ரூ. 16.86 லட்சத்தை விடுவிக்க ஒப்புதல், மாற்றுத்திறனாளிகள் இலவச அரிசி விநியோகத் திட்டத்தின்கீழ் புதுச்சேரியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஜூன் 2021 முதல் ஆகஸ்ட் 2021 வரையிலான மூன்று மாதங்களுக்கு இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்க ரூ. 2.75 கோடிக்கு அனுமதி வழங்கி ஒப்புதல் அளித்துள்ளார். இத்தகவலை துணைநிலை ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago