தமிழ்நாடு தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலர் முனைவர் பொ.சங்கர் நேற்று பண்ருட்டி எல்.என்.புரத்தில் உள்ள கதர் வாரியத்திற்கு சொந்தமான டிடர்ஜெண்ட் சோப்பு அலகில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு உற்பத்தி செய்யப்படும் சோப்புகளின் தரம் மற்றும் எடை அளவினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் காதி கிராப்ட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதியதாக வந்துள்ள பட்டு புடவைகள், பிராண்டட் புடவைகள், கதர் புடவைகள் ஆகியவற்றை பார்வையிட்டு, காதி கிராப்;ட்டில் விற்பனை செய்யப்படும் சுத்தமான தேன், சோப்பு வகைகள், கதர் ஆடைகள், தலையணை உள்ளிட்டவைகள் குறித்து வாடிக்கையாளர்களிடம் எடுத்துரைத்து விற்பனையை அதிகப்படுத்த காதிகிராப்ட் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் கடலூர் தேவணாம்பட்டினம் கடற்கரை சாலையில் உள்ள மண்டல பனை பொருள் மையத்தினை பார்வையிட்டு பனை பொருட்களின் உற்பத்தியை அதிகப்படுத்த ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து வடலூர் கைமுறை காகித அலகை பார்வையிட்டு அரசு அலுவலகங்களுக்கு தேவையான கோப்பு அட்டைகள் அதிகம் உற்பத்தி செய்ய அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது திருச்சி மண்டல துணை இயக்குநர் பாலகுமாரன், வாரிய உதவி இயக்குநர்கள் கோபாலகிருஷ்ணன், கண்ணன், தேவமனோகரி, கதர் ஆய்வாளர் ராஜம், மேலாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago