ஆறு மாதங்களுக்கான ஊதியநிலுவை, இரண்டு ஆண்டுகளுக்கான நிலுவை போனஸ் தரக்கோரி சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள் தலைமைஅலுவலகத்தை முற்றுகையிட்ட னர்.
புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்களுக்கு 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. கடந்தாண்டும், நடப்பாண்டும் என இரு ஆண்டுகளுக்கான போனஸ் தரக்கோரி தலைமை அலுவலகத்தை ஊழியர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக கேட்டரிங் மற்றும் நீர் விளையாட்டு ஊழியர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். இதில் இணை ஒருங்கிணைப்பாளர்கள் கஜபதி, முகுந்தன், விஜயராஜ், குமார், கல்யாணசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர். இதைதொடர்ந்து சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் ஜார்ஜ் மாறம், புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன கூட்டு இயக்க இணை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வம் மற்றும் மோகன கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதையடுத்து வெள்ளிக்கிழமை (இன்று) மாலைக்குள் 2019-20-ம்நிதியாண்டுக்கான போனஸ் தரப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago