ஓய்வூதிய நிலுவை கேட்டு புதுவை நகராட்சி முற்றுகை :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி நகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய நிலுவை மற்றும் பணப்பலன் நிலுவையை வழங்க வலியுறுத்தி நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி நகராட்சி அலுவல கத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்கள் 750 பேர் வரை உள்ளனர். இவர்களில் 250 பேருக்கு இதுவரை ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை. ஓய்வூதியம் பெற்று 5 ஆண்டு களுக்கு மேலாகியும் பலருக்கு கிராஜிவிட்டி உள்ளிட்ட ஓய்வூதிய பலன்களை முழுமையாக வழங்கவில்லை. மாதந்திர ஓய்வூதியமும் கடந்த ஓராண்டாக வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 4 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. நகராட்சி பணியாளர்களுக்கும் கடந்த 2 மாதங்கள் ஊதியம் வழங்காமல் உள்ளனர். இதனால், தீபாவளிப் பண்டிகையொட்டி 4 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்