வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு : தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தி.சாரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொது மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொய்வின்றி நிறைவேற்றுவதற்கு மாநகராட்சியின் நிதி ஆதாரம் இன்றியமையாததாகும். எனவே, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை உரிய காலத்துக்குள் செலுத்த வேண்டும். அக்டோபர் வரை 30 சதவீதம் தொகைமட்டுமே வசூலாகியுள்ளது.

குறிப்பாக கதிர்வேல் நகர்.தபால் தந்தி காலனி, பாளையங்கோட்டை சாலை மேற்கு, டூவிபுரம் 1-வது தெரு, 2-வது தெரு, சங்கர்காலனி, சுப்பையாபுரம் 1-வது தெரு மெயின், போல்டன்புரம் 1-வதுநெரு மெயின், முனியசாமிபுரம் மேற்கு, பிரையண்ட் நகர் 12-வதுதெரு பண்டாரம்பட்டி, ராஜகோபால் நகர், ராஜீவ் நகர், மீளவிட்டான், போல்பேட்டை ஹவுசிங் போர்டு, கேடிசி நகர், முத்தம்மாள் காலனி, போல்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் 6-வது தெரு, முத்து கிருஷ்ணாபுரம் 7-வது தெரு மெயின்,பூபாலராயர்புரம், திரேஸ்புரம் கடற்கரை சாலை, தட்டார் தெரு, தட்டார்தெரு தொடர்ச்சி, குரூஸ்புரம், நாராயணன் தெரு, மறக்குடித் தெரு, செயின்ட் பீட்டர் கோயில் தெரு, பிரமுத்து சந்து, தெற்கு காட்டன் சாலை, மேலூர் பங்களா தெரு, குமாரர் தெரு, சிவந்தாகுளம் சாலை, ரோச் காலனி, ஜார்ஜ் சாலைஆகிய பகுதிகளில் மிகவும் குறைவான அளவிலேயே வரி வசூலாகியுள்ளது.

மாநகராட்சியின் அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் இணைப்புஎடுக்கப்பட்டதன் காரணமாக பெருமளவில் நிதி இழப்பு ஏற்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. வரி நிலுவை வைத்துள்ள கட்டிடங்களில் உள்ள குடிநீர்இணைப்புகளையும், அனுமதியின்றி எடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளையும் துண்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பெருவாரியாக நிலுவை வைத்துள்ள பகுதிகளுக்கு ஒட்டுமொத்த குடிநீர் விநியோகத்தை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகைகளை உடனடியாக பொதுமக்கள் செலுத்த வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்