தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 1,200 போலீஸார் பாதுகாப்பு :

By செய்திப்பிரிவு

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 1,200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

பசும்பொன்னில் வரும் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. எஸ்பி தெரிவித்ததாவது:

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் 1,200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்ட எல்லையோரங்களில் 12 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 205 முக்கிய இடங்களில் போலீஸார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கமான நெடுஞ்சாலை ரோந்து தவிர, கூடுதலாக 26 நான்கு சக்கர வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, ஏஎஸ்பிக்கள் ஹர்ஷ் சிங், சந்தீஸ், டிஎஸ்பிக்கள் வெங்கடேசன், சங்கர், உதயசூரியன், சம்பத், கண்ணன், பிரகாஷ், பாலாஜி, பிரேமானந்தன், பயிற்சி டிஎஸ்பிக்கள் கணேஷ் குமார், ஷாமளா, பவித்ரா மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்