அண்ணாமலையார் கோயிலில் : ரூ.68.97 லட்சம் காணிக்கை :

By செய்திப்பிரிவு

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ரூ.68.97 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

தி.மலை அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோயில்கள், ஆதி அண்ணாமலையார் கோயில், திருநேர் அண்ணா மலையார் கோயில் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலில் 30-க்கும் மேற்பட்ட உண்டியல் கள் வைக்கப்பட்டு பக்தர்களிடம் இருந்து இந்து சமய அறநிலையத் துறையினர் காணிக்கையை பெற்று வருகின்றனர். பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுகிறது. அதன்படி ஐப்பசி மாதத்தை யொட்டி, உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. அதில் ரூ.68,97,087 மற்றும் 345 கிராம் தங்கம், 382 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்