தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பிறகு டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வில் இருந்தார்.
இந்நிலையில், அவருக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு மருத்துவக் குழுவினர் ரஜினிகாந்தின் உடல் நிலையை பரிசோதித்தனர். மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரஜினிகாந்துக்கு மேற்கொள்ளப்பட்டிருப் பது வழக்கமான மருத்துவப் பரிசோதனைதான் என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago