திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சியில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.
இதில் கண், பல், காது, மூக்கு, தொண்டை, வயிறு தொடர்புடைய கோளாறுகள், சிறுநீர் கோளாறு, பொது மருத்துவம், பன்முனை மருத்துவ பரிசோதனை, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவம், கர்ப்பிணிகள் மற்றும் பெண்களுக்கு என அனைத்து மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படும். வரும் 21, 22, 23, 28, 29,30 ஆகிய தேதிகளிலும், நவம்பர் மாதத்தில் 5, 12, 11, 12, 13, 18, 20, 25, 27, 30 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
திருப்பூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார் கூறும்போது ‘‘திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் தலா மூன்று முகாம் வீதம், 39 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இதில், உடல்நலம் குறித்த ஆலோசனை வழங்கப்படும். அதிநவீன பரிசோதனை சாதனங்கள் உதவியுடன் நோய் கண்டறியப்பட்டு, தேவையான சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும். மக்கள் வசிக்கும் பகுதிக்கே மருத்துவக் குழுவினர் வருவதால், உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். முகாமில் கரோனா பரிசோதனையும் செய்யப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago