கோவை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் கீழ், ஆவாரம்பாளையத்தில் செயல்பட்டுவரும் ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ‘பாஷ்’ மற்றும் ‘அறம்’ அறக்கட்டளை மூலமாக, நோயாளிகளுக்கான மானிட்டர்கள், சிரிஞ்சு பம்ப், வெண்டிலேட்டர்கள், என்.ஐ.வி. வெண்டிலேட்டர்கள் அடங்கிய ‘‘உயிர் காக்கும் உபகரணங்கள்’’ நிறுவப்பட்டுள்ளன. இதன் தொடக்கவிழா ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கடந்த 13-ம் தேதி நடந்தது. விழாவுக்கு எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி தலைமை வகித்தார். ராமகிருஷ்ணா மருத்துவமனை டீன் மற்றும் மருத்துவ இயக்குநர் பி.சுகுமாரன் வரவேற்றார்.
கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், ‘பாஷ்’ நிறுவன கார் மல்டிமீடியா பொது மேலாளர் வி.எஸ்.ஷைஜூ ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அறம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் லதா சுந்தரம் திட்ட விளக்கவுரையாற்றினார். அதைத் தொடர்ந்து, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை நோயாளிகளின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையை மனதில் கொண்டு, 430 எல்.பி.எம். திறன்கொண்ட ஆக்ஸிஜன் ஜெனரேட்டரை இம்மருத்துவமனை அமைத்துள்ளது. இதிலிருந்து நாளொன்றுக்கு 0.8 கே.எல். ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யலாம். மேலும், 13 கே.எல். கொள்ளளவு கொண்ட மருத்துவப் பயன்பாட்டிற்கான திரவ ஆக்ஸிஜன் கொள்கலனும் இங்கு உள்ளது. இவ்வளவு ஆண்டுகளாக மருத்துவ சேவை அளித்துவரும் இம்மருத்துவமனையில், புதிதாக உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் மூலமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன் வந்திருப்பதை மனதாரப் பாராட்டுகிறேன்’’ என்றார்.l
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago