15 வருடங்களுக்கு மேலான வாகனங்களை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிட கோரிக்கை :

By செய்திப்பிரிவு

பதினைந்து வருடங்களுக்கு மேலான வாகனங்களை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிட வேண்டும் என, ‘சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர்’ என்ற நுகர்வோர் அமைப்பின் தலைவர் சி.எம்.ஜெயராமன் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோருக்கு அவர் அனுப்பிய இ-மெயிலில் கூறியிருப்பதாவது:

பதினைந்து வருடங்களுக்கு மேலான வாகனங்களை திரும்பப் பெறும் நடவடிக்கை, சாமானிய மக்களுக்கு மிகப் பெரிய கவலையையும், சுமையையும் ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதைய கரோனா தொற்று கால கட்டத்தில் இந்நடவடிக்கை தேவை இல்லை என்று கருதுகிறோம். நம் நாட்டில் தற்போதுள்ள கலாச்சார வழக்கங்கள் அடிப்படையில் 30 ஆண்டுகள் வரை கூட வாகனங்களை நல்ல முறையில் பராமரித்து பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மக்களின் நலனுக்காக இப்படிப்பட்ட சிந்தனையை மத்திய அரசு தற்போதைக்கு கைவிட வேண்டும். மத்திய அரசு வாகன உற்பத்தியாளர்களை தொடர்பு கொண்டு, குறைந்த செலவில், சரியான பராமரிப்பு செய்து கொடுப்பது என்பதும் உசிதமாக இருக்கும்’’ எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்