ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வில் ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட் சாதனை :

By செய்திப்பிரிவு

ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட்டில் பயிற்சி பெற்ற மிரிதுல் அகர்வால் நடப்பாண்டு ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அதன் இயக்குநர் பிரஜேஷ் மகேஸ்வரி கூறியுள்ளதாவது:

கரக்பூர் ஐஐடி நடத்திய மதிப்பு மிக்க ஐஐடி அட்வான்ஸ்ட் தேர்வில் ஆலன் நிறுவனம் மீண்டும் வரலாறு படைத்துள்ளது. கரோனா பெருந்தொற்று கடுமையாக நிலவிவந்த சூழ்நிலையிலும் ஆலன் மாணவர்கள் தங்களின் கடின உழைப்பு மூலம் தங்களை நிரூபித்துள்ளனர்.

ஆலன் பயிற்சி மையத்தில் 4 ஆண்டுகளாக பயின்ற மிரிதுல் அகர்வால் ஐஐடி நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி அவர் இதுவரை யாரும் பெறாத அளவுக்கு 360-க்கு 348 மதிப்பெண்கள் (96.66%) பெற்றுள்ளார். ஜேஇஇ மெயின், ஜெஇஇ அட்வான்ஸ்ட், கேவிபிஒய் ஆகிய தேர்வுகளில் முதலிடம் பெற்றுள்ள முதல் மாணவர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இவர் 9 முதல் 12-ம் வகுப்புவரை ஆலன் கல்வி மையத்தில் பயின்றவர்.

கடந்த 8 ஆண்டுகளில் 4-வது முறையாக ஆலன் மாணவர்கள் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். அதேபோல பெண்களில் ஆலனில் பயின்ற காவ்யா சோப்ரா முன்னிலை பெற்றுள்ளார். இவர் அகில இந்திய அளவில் 98-வது ரேங்க் பெற்றுள்ளார்.

இத்தேர்வில் அகில இந்திய அளவிலான பட்டியலில் முதல் 15 இடங்களில் அர்னவ் ஆதித்யா சிங், மன்பிரீத் சிங், அனந்த் கிடாம்பி, அமே பி.தேஷ்முக், தனேய் வினித் தயாள், கார்த்திக் குமார் உள்ளிட்டோர் முதல் 7 இடங்களை பெற்றுள்ளனர்.

அதேபோல அகில இந்திய அளவில் 27 ஆலன் மாணவ, மாணவிகள் முதல் 50 இடங்களுக்குள்ளும், 49 பேர் முதல் 100 இடங்களுக்குள்ளும் வந்துள்ளனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்