புதுச்சேரி நகர அமைப்பு குழும வாரியத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். 2018-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட தலைவர், உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த ஏப்ரலுடன் முடிவடைந்தது. இதையடுத்து வாரியத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதன்பேரில் புதுச்சேரி நகர அமைப்பு துறையை கவனிக்கும் முதல்வர் ரங்கசாமி வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நகரஅமைப்பு செயலாளர் துணைத்தலைவராகவும், மாவட்ட ஆட்சி யர், உள்ளாட்சி இயக்குநர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆகியோர் உறுப்பினர் களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமை நகர அமைப்பாளர் வாரிய உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதவிர அரசு பணி அல்லாத உறுப்பினர்களாக சிவகந்தன், நந்தா ஜெயதரன், வெங்கடேச பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago