தொடர் விடுமுறையால் புதுவையில் - சுற்றுலா பயணிகள் குவிந்தனர் :

By செய்திப்பிரிவு

தொடர் விடுமுறையால் புதுச்சேரி யில் சுற்றுலா பயணிகள் குவிந் தனர்.

நவராத்திரி பண்டிகையை யொட்டி நாடு முழுவதும் தொடர்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19-ம் தேதி வரை விடு முறை உள்ளது. இதனால் தமிழகம்,கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா வில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிந்துள்ளனர்.

ஆயுதபூஜை முடிந்தவுடன் நேற்று மாலையிலிருந்து புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. நகர பகுதியில் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கடற்கரை சாலையில் அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகள் கடற்கரை மணல்பரப்பில் விளையாடியும், குளித்தும் மகிழ்ந்தனர். இதே போல சுற்றுலா தலங்களான நோணாங்குப்பம் படகு குழாம், சின்னவீராம்பாட்டினம் கடற்கரை, பாண்டி மெரீனா கடற்கரை ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர். விடுதிகள், ஓட்டல்கள் நிரம்பி வழிந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்