பொதுமக்கள் அதிகம் புழங்கும் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகிலேயே மது அருந்துவதால் பொதுமக்கள் முகம் சுழிக்கின் றனர்.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய வெளிப்புற நுழைவாயில் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு காலை கடை திறந்த நிலை யில், மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு, பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியிலேயே அமர்ந்து மது அருந்துகின்றனர்.
காலை 10 முதல் இரவு 8 மணி வரை அப்பகுதியை மது அருந்துவோர் ஆக்கி ரமித்துக் கொள்வதால்அவ்வழியாக செல் லும் பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முகச்சுழிப்போடு, மிகுந்த சிரமத்தோடு அவ்விடத்தை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் யாரும் மது அருந்தக் கூடாது எனவும், அவ்வாறு மது அருந்துவது குறித்து பொது மக்கள் புகாரளிக்க வட்டம் வாரியாக காவல் நிலையங்களின் எண்ணை அறிவித்து, அதன் மூலம் புகார் செய்ய மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுத்து சிலரை கைது செய்தது. அதுபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பொது இடங்களில் மது அருந்துவதை தவிர்க்கும் விதமாக மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் குரலாக உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago