திட்டக்குடி அருகே - டாஸ்மாக் விற்பனையாளரின் கவனத்தை திசைதிருப்பி ரூ.1.5 லட்சம் கொள்ளை :

By செய்திப்பிரிவு

திட்டக்குடி அடுத்துள்ள பெரங்கியம் டாஸ்மாக் கடை விற்பனை யாளரிடம் முகமூடி அணிந்த நபர்கள் ஒன்றரை லட்சம் ரூபாயைகொள்ளையடித்துச் சென்றுள்ள னர்.

திட்டக்குடி அடுத்த பெரங்கியம் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கிவருகிறது. கடையின் விற்பனையா ளர் பிரசன்னா நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டு வெளியே வந்து தனது பைக்கை எடுக்க முயற்சித்தார். அப்போது, அவரது பைக்கின் வயரை மர்ம நபர்கள் கழற்றி விட்டுள்ளனர். இதைக் கவனித்த பிரசன்னா ஒயரை மாட்டுவதற்காக பணப்பையை வண்டியின் டேங்க் மீது வைத்தார். பின்னர் ஒயரை மாட்ட முயற்சி செய்யும் போது, வண்டியின் மேலிருந்த ரூ.1,05,630 அடங்கிய பணப்பையை முகமூடி அணிந்த இரண்டுமர்ம நபர்கள் பறித்துக் கொண்டுதப்பியோடியுள்ளனர். இதைய டுத்து பிரசன்னா அளித்தப் புகாரின்பேரில், திட்டக்குடி டிஎஸ்‌பி சிவா விசாரணை நடத்தி வருகிறார்.

தொடரும் ஆள்மாறாட்டம்

திட்டக்குடி, ராமநத்தம், தொழு தூர் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் பணியமர்ந்தப்பட்ட விற்பனையாளர்களுக்கு மாற்றாக வேறு நபர்களை கடையில் அமர்த்தியிருக்கும் விற்பனையாளர்கள், அவர்கள் மூலம் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வரை கூடுதலாக வசூலிக்கின்றனர். அதில் கிடைக்கும் தொகையையே மாற்று நபர்களுக்கு ஊதியமாக வழங்கி விடுகின்றனராம்.

இதை எதிர்த்துக் கேள்வி யெழுப்பும் வாடிக்கையாளருக்கு மது கொடுப்பதில்லை என்ற புகார்கள் மது அருந்தும் வாடிக்கையாளர்களிடமிருந்து எழுந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்