புதுச்சேரியில் தீபாவளிக்கு முன்பாக ரேஷன்கடைகளை திறந்து மானிய விலையில் உணவுப் பொருட்களை தருமாறு முதல் வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் விடுத்துள்ள அறிக்கை:
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் ரங்கசாமி நியாய விலை கடைகள் மூலமாக உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார். குடிமைப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் நியாயவிலை கடைகள் திறக்கப்படும் என்று சொன்னார்.
தேசிய வேளாண் கூட்டுறவு சம்மேளனம் (NAFED) என்கிற மத்திய அரசு நிறுவனம், புதுச்சேரி நியாயவிலைக் கடை ஊழியர் கூட்டுறவு சங்கத்தை நோடல் (NODEL) ஏஜென்சியாக நியமித்திருக்கிறது. அதனால் 30 சதவீதம் மானிய விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்கும். மானிய விலையில் கிடைக்கும் உணவுப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கலாம். இவ்வளவு வாய்ப்பு இருந்தும் இன்னும் அதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்கள் உள்ளநிலையில் விலை உயர்வு,வேலையில்லாத் திண்டாட்டத் தினால் மக்கள் வாங்கும் சக்தி இழந்துள்ளனர். அரசின்பொதுத்துறையின் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் பல வருடங்களாக ஊதியம் இல் லாததால் பெரும் துயரத்தில் உள்ளனர்.
மாநில மக்களின் நிலை அறிந்த ஆட்சியானது மக்க ளுக்கு கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும். இதனுடன் தீபாவளியை முன்னிட்டு இலவச வேட்டி, சேலையும் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago