முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் குடும் பத்தினர், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக் கணக்கானோர் மரியாதை செலுத் தினர்.
அப்துல் கலாமின் 90-வது பிறந்த தினம் நேற்று நாடு முழு வதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள கலாமின் தேசிய நினைவகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வண்ண மலர்களாலும் அலங் கரிக்கப்பட்டிருந்தன.
கலாமின் நினைவிடத்தில் அவ ரது அண்ணன் மகன் ஜெயினு லாபுதின், மகள் நசிமா மரைக்காயர், பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். இதில் அனைத்து சமுதாயத்தவரும் கலந்துகொண்டனர்.
அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு காமாட்சி கணேசன் , சட்டப்பேரவை உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், நடிகர் தாமு, இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கழக அதி காரிகளும் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தமிழகத்தில் பல் வேறு பகுதிகளிலிருந்து வந்திரு ந்த மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், பல் வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி நினைவகத்தைப் பார்வையிட்டனர்.
அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலீம் கூறியதாவது,
பேக்கரும்புவில் அமைந்துள்ள கலாமின் தேசிய நினைவகம் மத்திய அரசால் விரிவாக்கம் செய்யப்படும் என ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. இதில் இளை ஞர்கள், மாணவர்களுக்குப் பயன்படும் வண்ணம் அறிவு சார் மையம், டிஜிட்டல் நூலகம் கொண்டு வருவதாக அறிவிக்க ப்பட்டிருந்தது.
ஆனால் கரோனா பரவல் காரணமாக அந்தப் பணிகள் முற்றி லும் தடைப்பட்டுள்ளன. விரைவில் மத்திய அரசு நினைவகத்தை விரி வாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago