தீபாவளிக்கு வெங்காயத்தின் தேவை அதிகரித்து விலை பல மடங்கு உயரும் வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் பல டன் வெங்காயத்தை பக்குவப் படுத்தி விளைநிலங்களில் கூடாரங் கள் அமைத்து பாதுகாத்து வருகின் றனர்.
தேனி மாவட்டத்தில் நாக லாபுரம், கொடுவிலார்பட்டி, லட்சுமிபுரம், கோபாலபுரம், குன் னூர், அம்மச்சியாபுரம், பள் ளபட்டி, பாலகிருஷ் ணாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் வெங் காயம் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக இவை அறுவடை செய்யப்பட்டுவருகின்றன. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் இவற்றை விளைநிலங்களில் மேற்புரம் ஓடு பதித்த நாணல் கூடாரங்களை அமைத்து இருப்பு வைத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறு ம்போது, வியாபாரிகள் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.15-க்குத்தான் வாங்குகின்றனர். எனவே தீபாவளிக்கு விற்பதற்காக இவற்றை உலர வைத்து கூடார ங்களில் பாதுகாத்து வருகிறோம் என்றனர். இதேபோல தீபாவளிக்கு ஆந் திரா, கர்நாடகாவிில் இருந்தும் அதிகளவில் வெங்காயம் வரும். உரிய விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பல டன் வெங்காயத்தை பாதுகாத்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago