மருதுபாண்டியர் நினைவுதினம் - அஞ்சலி செலுத்த வருவோருக்கு வழிமுறைகள் சிவகங்கை ஆட்சியர் அறிவிப்பு :

மருதுபாண்டியர் நினைவுதின அஞ்சலி செலுத்த வருவோர் அரசு வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அக்.24-ம் தேதி திருப்பத் தூரிலும், அக்.27-ம் தேதி காளை யார்கோவிலிலும் நடக்கும் மருது பாண்டியர் நினைவுநாள், அக்.30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடக் கும் முத்தராமலிங்கத் தேவரின் குரு பூஜை குறித்த ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் நடந்தது.

மாவட்ட எஸ்பி செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது:

கரோனா ஊரடங்கு நடை முறையில் உள்ள நிலையில் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மரியாதை செலுத்த வரும் அரசியல் கட்சித் தலைவர்கள், பிற அமைப்புத் தலைவர்கள் அரசு வழிகாட்டுதலை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

போலீஸாரிடம் வாகன அனுமதி பெற அக்.23-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். வாகனத்தில் 5 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும். வாடகை வாகனங்க ளுக்கு அனுமதியில்லை. வாகன மேற்கூரையில் அமர்ந்தும், வெளி யில் நின்று கொண்டும் பயணிக்கக் கூடாது.

ஆயுதங்கள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். வாகனத்தில் ஒலிப்பெருக்கிகள் பொருத்தக் கூடாது. சாதி, மத உணர்வுகளை தூண்டு பேனர்களை கட்டவோ, கோஷங்களை எழுப் பவோ கூடாது.

போக்குவரத்து வழித்தடங் களில் இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நிறுத் தக்கூடாது. நடைபயணமாகச் சென்று அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை. அரசு பேருந்துகளில் செல்ல அனுமதி உண்டு. ஆனால், அரசு பேருந்தில் படிக்கட்டு, மேற் கூறையில் பயணிக்கக் கூடாது.

மேலும் வாகன அனுமதிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒற்றை சாளர முறையில் வரு வாய்த்துறை, போலீஸார் கொண்ட தற்காலிக முகாம் அமைக் கப்படும். முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு செல்வோர் அனு மதி பெற ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண் ணப்பித்து அனுமதி பெற்று கொள் ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன். கூடுதல் எஸ்பிகள் அன்பு, திருவெற்றிச்செல்வம், பாஸ்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)சவுந்திரராஜன், ஆயத்தீர்வை உதவி ஆணையர் சிந்து, கோட் டாட்சியர் முத்துக்கழுவன் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE