மதுரை காமராசர் பல்கலைக்கழக - தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் : அமைச்சர், எம்.பி.க்கு சங்க நிர்வாகிகள் மனு

By செய்திப்பிரிவு

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களின் சம்பளம் மற்றும் பணி நிரந்தரம் தொடர்பான கோரிக்கைகள் குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன் முடி, விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு கடிதம் அனுப்பினர்.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரியும் ஊழி யர்கள், தங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன், அவர்களை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக உறுதியளித்தார்.

இந்நிலையில், விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, உயர் கல்வி செயலர் ஆகியோருக்கு தங்களின் கோரிக்கைகள் குறித்து ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கடிதம் எழுதியிருந்தனர். இதில், அவர்கள் கோரிக்கை நிறைவேற உரிய முயற்சி எடுப்பதாக மாணிக்கம் தாகூர் பதில் கடிதம் அனுப்பியிருப்பதாக சங்க நிர்வா கிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்