ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்வது, ஆள்மாறாட்டம் செய்து பயணிப்பது, ரயில் நிலையங்களில் முகக்கவசம் தவிர்த்தல் போன்ற விதிமீறல் தடுக்க, பயணச் சீட்டு பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொள்வது வழக்கம். ஏப்ரல் முதல் அக்டோபர் 12 வரை மதுரை கோட்டத்தில் நடத்திய பயணச்சீட்டு சோதனையில், ரூ.4.16 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சென்னை கோட்டத்தில் ரூ. 12.78 கோடி, சேலம் கோட்டத்தில் ரூ.4.15 கோடி, திருச்சி கோட்டத்தில் ரூ.2.81 கோடி மற்றும் தெற்கு ரயில்வேயில் அக்டோபர் 12-ம் தேதி மட்டும் ரூ.37 லட்சம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாத 32,624 பயணிகளிடமிருந்து ரூ.1.63 கோடி அபராதமும் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago