பெரம்பலூர்: பெரம்பலூருக்கு நேற்று வந்த மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள பதிவேடுகளை பார்வையிட்ட அவர், நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சுகாதாரம் மற்றும் மின்விளக்கு போன்ற பணிகளை நிறைவேற்ற முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் குமரிமன்னன் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago