பெரம்பலூர் அருகே மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்/ தஞ்சாவூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் செந்தில்(42). விவசாயி. இவரது விவசாய நிலம் வனப்பகுதி அருகேயுள்ளதால் வன விலங்குகளின் தொல்லை இருந்து வந்தது. இதையடுத்து, செந்தில் தனது வயலைச்சுற்றி மின் வேலி அமைத்திருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், செந்தில் தனது மகன் தர்மராஜூடன் (15) நேற்று மாலை வயலுக்குச் சென்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் உடல் கருகி அந்த இடத்திலேயே தந்தையும், மகனும் உயிரிழந்தனர். தகவலறிந்த மருவத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தலையாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன்(62), நேற்று வயலில் நடவுப்பணிக்காக தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது, வயலில் அறுந்துகிடந்த மின்சார கம்பியை மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்