‘கதி சக்தி’ தேசிய செயல் திட்டம் - நாட்டின் பொருளாதாரத்தை மாற்றும் சக்தியாக திகழும் : இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு மையம் கருத்து

By செய்திப்பிரிவு

பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ள கதி சக்தி என்ற பல்முனைஇணைப்புக்கான தேசிய செயல்திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும் ஒரு பெரியசக்தியாக திகழும் என இந்தியஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின்(ஃபியோ) அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் ஏ.சக்திவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டங்களை விரைவாக நிறைவேற்றவும், சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளையும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கும் ‘கதி சக்தி’ என்ற பல்முனை இணைப்புக்கான தேசிய செயல் திட்டத்தை பிரதமர்மோடி தொடங்கி வைத்துள்ளார். இதை ஏற்றுமதி மேம்பாட்டு மையம்வரவேற்கிறது. இதன்மூலம், நாட்டின் உற்பத்தி திறன்அதிகரிப்பதோடு, சர்வதேச போட்டியை சமாளித்து உற்பத்தியும், ஏற்றுமதியும் அதிகரிக்கும்.

ஒரு குடை கட்டமைப்பின் கீழ், அனைத்துப் பயன்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டமிடல் என்பது இதற்கு முன்பு இல்லாதது. கடைசி மைல் இணைப்பு என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில், இது கணிசமான முதலீடு தேவையில்லை என்றாலும், சரக்குப் போக்குவரத்து செலவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பின் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்காக 16 அமைச்சகங்களை மின்னணு தளத்தில் கொண்டு வருவது இந்தியப் பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும் ஒரு பெரிய சக்தியாக திகழும்.

மேலும், இது பல துறைகளுக்கு சமமாகப் பயன்படுத்தப்படலாம். அங்கு அமைச்சர்களுக்கு இடையேயான நெருக்கமான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பட்டு அதிவேக வளர்ச்சிக்கு வழி வகுக்கும். இத்தகைய செயல் திட்டங்கள் சர்வதேச அளவில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பது மட்டுமின்றி, சர்வதே அளவில் முதலீடு செய்ய உகந்த நாடாக இந்தியா திகழும். இவ்வாறு சக்திவேல் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்