திருவாரூர்: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) சார்பில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பல்நோக்கு பணியாளர்கள், பட்டய பயிற்சி அளித்தல், மருத்துவ உதவியாளர்கள் போன்ற 3,261 காலி பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தேர்வாணைய இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும், இலவச மாதிரித் தேர்வுகளும் திருவாரூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் பங்குபெற விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை நேரிலோ அல்லது 04366 224 226 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு விவரங்களை கேட்டுப் பயனடையலாம் என ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago