தஞ்சாவூர்: தஞ்சாவூர் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் மருதையன்(82). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது செல்போனில் சில நாட்களுக்கு முன்பு அழைப்பு வந்தது. அதில், பேசிய நபர், தான் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் என்றும், மூத்தக் குடிமக்களுக்கான புதிய ஏடிஎம் அட்டை வந்துள்ளதாகவும், பழைய ஏடிஎம் அட்டையில் உள்ள விவரங்களைத் தருமாறும் கூறியுள்ளார்.
அதற்கு பாரத ஸ்டேட் வங்கியில் கணக்குக் கிடையாது என்றும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்தான் உள்ளது எனவும் மருதையன் கூறியுள்ளார். அப்போது, எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, அட்டையில் உள்ள விவரங்களைக் கூறுங்கள் என எதிர்முனையில் பேசிய நபர் கூறியிருக்கிறார்.
இதை நம்பிய மருதையன், ஏடிஎம் அட்டை எண், ஓடிபி எண் உள்ளிட்டவற்றை கூறியுள்ளார். இதையடுத்து மறுமுனையில் இருந்த நபர் இணைப்பைத் துண்டித்துவிட்டார். பின்னர், மருதையன் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.3.26 லட்சம் நூதன முறையில் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago