கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம் - மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ரூ.1.85 கோடி விற்பனை இலக்கு :

By செய்திப்பிரிவு

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற் பனையில் மயிலாடுதுறை மாவட் டத்துக்கு ரூ.1.85 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலை யத்தில் தீபாவளி சிறப்பு விற்ப னையை ஆட்சியர் ரா.லலிதா நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியது:

தீபாவளி பண்டிகையை முன் னிட்டு, மயிலாடுதுறையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்துக்கு ரூ.1.25 கோடி, சீர்காழி கோ-ஆப்டெக்ஸ் நிலை யத்துக்கு ரூ.60 லட்சம் என மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ரூ.1.85 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் கனவு நனவு திட்டத்தின்கீழ், வாடிக்கையாளர்களிடம் இருந்து மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.500 வரை 10 மாத தவணைகள் மட்டும் பெறப்பட்டு, 11 மற்றும் 12-வது மாத தவணைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்துகிறது. அத்தொகையில் பொதுமக்கள் பருத்தி மற்றும் பட்டு ரக துணிகளை வாங்கி பயன்பெறலாம். எனவே, பொது மக்கள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத் துக்கு உறுதுணையாக இருந்து நெசவாளர்களின் தொழில் வளர பக்கபலமாக இருக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் சௌ.சாதிக் அலி, மண்டல இயக்குநர் லெனின், வர்த்தக மேலாளர் கந்தசாமி, விற்பனை நிலைய மேலாளர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்