அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பொங்கல் விழா

By செய்திப்பிரிவு

சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கல்லூரி மகளிர் குழு சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு முதல்வர் செ.அசோக் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். முன்னதாக வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் பிரியா மீரா வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு கவிதை, வண்ணக் கோலப் போட்டிகளும், பேராசிரியர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. கவிதைப் போட்டியில் ஆங்கிலத் துறை 3-ம் ஆண்டு மாணவி மார்டினா முதலிடத்தையும், கணிதத் துறை 3-ம் ஆண்டு மாணவி சௌரிநாச்சியார் 2-ம் இடத்தையும், தாவரவியல் 3-ம் ஆண்டு மாணவி கார்த்திகா 3-ம் இடத்தையும் வென்றனர்.

வண்ணக் கோலப் போட்டியில் பிபிஏ 3-ம் ஆண்டு மாணவிகள் கௌரி, யோகலட்சுமி ஆகியோர் முதல் பரிசையும், தாவரவியல் துறை 3-ம் ஆண்டு மாணவிகள் சித்ராதேவி, சபரிபிரியா 2-ம் இடத்தையும், கணிப்பொறியியல் துறை மாணவிகள் திலகவதி, விஷ்ணுபிரியா 3-ம் பரிசையும் வென்றனர்.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் செ.அசோக் பரிசுகளை வழங்கினார். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை கார்த்திகை செல்வி நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்