சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்த மாணவி சி.கவிரக் ஷனா, டெல்லியில் நடந்த அகில இந்திய பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிளில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இவர் இந்த போட்டியில் காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கிய இளவேனில் என்ற பெண்ணை (குஜராத்துக்காக விளையாடுகிறார்) மூன்றாம் இடத்துக்கு தள்ளி முதலிடம் பெற்றுள்ளார். கவி ரக் ஷனாவிடம் தோல்வியடைந்த இளவேனிலுக்கு குஜராத் அரசு ஆண்டிற்கு பத்து லட்சம் நிதி உதவி, தனிப்பட்ட இரண்டு பயிற்சியாளர்களை வழங்கி ஊக்குவித்து வருகிறது. ஆனால், அரசின் மற்றும் தனியாரின் எந்த ஸ்பான்சர் உதவியும் இல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக மதுரைக்காகவும், தமிழகத்திற்காகவும் கவி ரக் ஷனா பல்வேறு போட்டிகளில் பெற்றோர் உதவியுடன் பங்கேற்று பல்வேறு பரிசுகளையும், சிறப்பிடங்களையும் பெற்றுள்ளார். தற்போது தேசிய அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். ஆனால், தமிழக அரசின் விளையாட்டு துறை இவரை இதுவரை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்றும், அவருக்கு உதவ வேண்டும் என்று சாதனை படைத்த பெண்ணின் தந்தை டாக்டர் சக்கரவர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago