நூல் விலை உயர்வைக் கண்டித்து ராஜபாளையத்தில் விசைத்தறிக் கூடங்கள் வேலைநிறுத்தம்

By செய்திப்பிரிவு

ராஜபாளையம் பகுதியில் நூல் விலை உயர்வைக் கண்டித்து சிறு விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஆவாரம்பட்டி மற்றும் அம்பலபுளி பஜார் பகுதிகளில் 2,500-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இங்கு 4 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது நூல் விலை உயர்வால் விசைத்தறிக் கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் ரூ.900 விற்ற நூல் தற்போது ரூ.1,300-க்கு விற்கப்படுகிறது. இதனால், தொழிலில் தொடர்ந்து ஈடுபட முடியாமல் சிறு விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் சங்கத்தில் சாராத உறுப்பினர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாள் ஒன்றுக்கு ரூ.20 லட்சம் அளவில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பாண்டியராஜன் கூறுகையில், நூல் விலை உயர்ந்ததுடன், சாயப் பட்டறைகளில் நூலுக்கு சாயம் ஏற்றுவதிலும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து எங்களால் வேலை செய்ய இயலவில்லை

மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இதில் தலையிட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்