சிவகங்கை மாவட்டம், திருப் புவனம் அருகே தொல்லியல் சிறப்பு வாய்ந்த கீழடியில் நடந்த சுற்றுலா பொங்கல் விழாவில் ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி சிலம்பம் சுற்றினார்.
கீழடியில் இதுவரை நடந்த 6 கட்ட அகழாய்வில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண் டெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் நகர நாகரிகம் கண்ட றியப்பட்டது.
இந்நிலையில் நேற்று சுற்று லாத் துறை சார்பில் கீழடியில் பொங்கல் விழா நடந்தது. தமிழர் பாரம்பரிய உடை அணிந்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். மரக்கால் ஆட்டம், பரத நாட்டியம், நாட்டு புற ஆடல், பாடல், கோலப் போட்டி, யோகா, உறியடி, கும்மி, ஒயிலாட்டம், மல்லர் கம்பத்தில் சாகசம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட ஆட்சியர் சிலம்பம் சுற்றினார். ஜல் லிக்கட்டுக் காளைகளை வளர்த்து வருபவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கூறியதாவது: 10 ஆண்டுகளாக தமிழகத்தில் பணிபுரிவதால் நானும் தமிழன் தான். கீழடி பொங்கல் விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் அடை கிறேன்.
பாரம்பரியத்தை இளம்தலைமுறையினர் மறக்கக் கூடாது என்பதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago