அழகப்பா பல்கலைக்கழகத்தில் முப்பெரும் விழா வள்ளுவம் ஆங்கில மொழியாக்க நூல் வெளியீடு

By செய்திப்பிரிவு

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழ கத்தில் பொங்கல், திருவள்ளுவர் தினம், ஆசிரியர் தினம் ஆகிய மும்பெரும் விழாக்கள் நடந்தன.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பதி வாளர் (பொ) வசீகரன் வரவேற்றார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மாணிக்கனார் தமிழில் எழுதிய வள்ளுவம் என்ற நூலை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் செல்லப்பன் ஆங் கிலத்தில் மொழியாக்கம் செய்து ள்ளார். அந்த நூலை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வெளியிட துணைவேந்தர் ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து தமிழ் பண்பாட்டு மையம் சார்பில், ஒரு பேரிடரின் பதிவுத் தொகுப்பு என்ற நூல் வெளியிடப்பட்டது.

விழாவில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது: பொங்கல் விழா தமிழா்களின் பண்பாட்டு அடையாளத்தை பறைசாற்றும் விழா. இவ்வுலகத்தை அச்சுறுத்தும் தீய கிருமி உள்ளிட்ட அனைத்து சிக்கல்களையும் தீர்க்க கல்வி ஒன்றே சிறந்த வழி. உலகிலேயே சமயம், பண்பாட்டை தாங்கிப் பிடித்த பெருமை தமிழ் மொழிக்கே உண்டு. சாதி, சமய அடையாளங்களைத் தாண்டிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் அறிவுக் கருவூலம் திருக்குறள். அது வாழ்க் கையின் அனைத்து நிலைக ளையும் தாண்டி, அனைவருக்கும் வழி காட்டிக் கொண்டிருக்கிறது என்றார். பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகள் சிறப்பாகப் பணிபுரிந்து வரும் 9 ஆசிரியா்களும், அலுவலர் ஒருவரும் கவுரவிக்கப்பட்டார்.

ரூசா 2.0 திட்டத்தில் தரமான கற்றல், ஆய்வுகளால் பல்கலைக்கழக குறியீட்டை 84 ஆக உயா்த்திய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பொங்கல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்