மதுரையில் ரயில் பெட்டி, என்ஜின்களுக்குரிய உதிரி பாகங்கள் குறித்த பண்டகப் பொருட்காட்சியை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் தொடங்கி வைத்தார்.
ரயில்வேயில் ரயில் பெட்டி, என்ஜின் தயாரிக்க பல்வேறு உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன.
ரயில்வேக்கு தரமான உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்கவும், அதிகமான உள்ளூர் நிறுவனங்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கும் வகையிலும், பண்டகப் பொருட்கள் காட்சி அரங்கு வழங்கவும், அதிகமான உள்ளூர் நிறுவனங்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கும் வகையிலும் புதிய பண்டகப் பொருட்கள் காட்சி அரங்கு ஒன்று மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அரங்கில் ரயில்வே துறைக்கு தேவையான உதிரி பாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பண்டக பொருட்காட்சி அரங்கை நேற்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர். லெனின் தொடங்கி வைத்தார். கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் லலித்குமார் மன்சுகானி, கோட்ட பண்டக மேலாளர் அவ்வாரு கிரண் குமார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் பங்கேற்றனர். உதிரி பாக உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் ரயில் பெட்டி மற்றும் எஞ்சின் பராமரிப்புக்கு எந்தெந்த உதிரிபாகங்கள் தேவைப்படுகின்றன என்பதை இந்த காட்சியரங்கு வாயிலாக அறிந்து தங்கள் வர்த்தக வாய்ப்புகளை அதிகரித்து கொள்ளலாம். இந்த பொருட்காட்சி அரங்கம், அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago